June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது- பிரதமர் மோடி தாக்கு

1 min read

DMK is also a family property – PM Modi attacks

10.4.2024
கச்சத்தீவை காங்கிரசும், திமுகவும் இலங்கைக்கு தாரை வார்த்து விட்டன என – பிரதமர் மோடி பேசினார்.

வேலூரில் பா.ஜ.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவர், ‘தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்’ என்று தமிழில் பேசி பிரசார பொதுக்கூட்டத்தில் உரையை தொடங்கினார்.

வேலூர் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

வர இருக்கிற தமிழ் புத்தாண்டு தினத்திற்கு எனது வாழ்த்துகளை உங்கள் அத்தனை பேருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற ஆண்டு நமது அனைவருக்கும் வளர்ச்சி மிகுந்த ஆண்டாக அமைய எனது வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன்.

உங்களுடைய அன்பு, ஆசீர்வாதம் எனக்கு தெரிகிறது. எனவே தமிழக மக்களின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து எனது முழு திறமையையும் வெளிபடுத்துவேன். வேலூரில் கூடிய கூட்டம் புதிய சகாப்தம் படைக்கப் போவதை டெல்லி உள்ள தலைவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய இடம் வேலூர்.

இன்றைய கூட்டத்தின் மூலம் வேலூர் மீண்டும் ஒரு சரித்திரம் படைக்கும். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயரை எதிர்த்ததை போல் மீண்டும் ஒரு வரலாறு நிகழ உள்ளது. வீரம் நிறைந்த வேலூரில் இறைவன் ஜலகண்டேஸ்வரரர், மருதமலை முருகப் பெருமானை தாழ்பணிந்து வணங்குகிறேன்.

2014-ம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை. எந்த பத்திரிகையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.
21-ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் மற்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம். உலக அரங்கில் இந்தியா இன்று வலிமையான நாடாக பார்க்கப்படுகிறது. அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப்பெரியதாக உள்ளது.
இந்தியா வல்லரசு ஆவதில் தமிழ்நாட்டின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். அதற்காக தமிழகம் கடுமையாக உழைக்கிறது.
வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு உதான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும். சென்னை, பெங்களூரு தொழில் துறை வழித்தடம் வேலூர் வழியாகத்தான் செல்கிறது. இதனால் வேலூர் வளர்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தி.மு.க. பெரும் தடையாக இருக்கிறது. அனைத்திலும் தி.மு.க. அரசியல் செய்கிறது.
தி.மு.க. ஒரு குடும்பத்தின் கம்பெனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. கொள்ளையடிப்பதிலும், ஊழலுக்கும் தி.மு.க. காப்பிரைட் வைத்துள்ளது.

மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை தி.மு.க. ஊழல் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறது. ஊழலின் ஒட்டுமொத்த அதிகார மையமாக தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. பழைய சிந்தனையிலேயே உள்ளது. கச்சத்தீவை காங்கிரசும், திமுகவும் சேர்ந்துதான் இலங்கைக்கு தாரை வார்த்து விட்டன என்பது தான் உண்மை.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.