தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min read
Southwest Monsoon rains above normal – India Meteorological Department
15.4.2024
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு வாட்டி வதைத்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும்.
இந்நிலையில், நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை 106% வரை பெய்யும் என்றும், தென்மேற்கு பருவமழை காலத்தில் நீண்ட கால சராசரிப்படி 87 செ.மீ. மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.