விலைவாசி உயர்வு பற்றி மோடி பேசுவது கிடையாது: ராகுல் காந்தி கேச்சு
1 min read
Modi never talks about price hike: Rahul Gandhi
16.4.2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்த நிலையில், ராகுல் காந்தி, தான் போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு அவர் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ரோட் ஷோ நடத்தினார். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பதிலுக்கு ராகுல் காந்தியும் பொதுமக்களுக்கு கை கொடுத்து உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில், இரண்டாவது நாளாக வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இன்று ரோடு ஷோ நடத்தினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-
இந்திய அரசியல் அமைப்பை அழிக்க ஆர்.எஸ்.எஸும் , பா.ஜனதாவும் முயற்சிக்கின்றன. ஆனால், நாட்டின் அரசியல் அமைப்பை காக்க காங்கிரஸ் போராடுகிறது. இந்தியாவின் மிகப்பெரும் தொழில் அதிபர்களின் கருவி போல மோடி செயல்படுகிறார். வேலை வாய்ப்பு இன்மை, விலை உயர்வு பிரச்சினை பற்றி மோடி ஒருபோதும் பேசுவது இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.