சங்கரன்கோவில் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தேர்தல் புறக்கணிப்பு
1 min read
Election boycott demanding removal of Tasmac shop near Sankarankoil
20.4.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதி கேகரிசல்குளம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் சாலை வசதி தெருவிளக்கு கழிவு நீர் ஓடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் அருகே கே.கரிசல்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து தேர்தலை புறக்கணித்து பெரும்பாலான மக்கள் போராட்டம் மொத்தம் 1045 ஓட்டுகளில் பத்து ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது. செய்தி சேகரிக்கச் செய்தியாளர்களை தடுத்து நிறுத்திய காவல் துறையினரால் வாக்குவாதம் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது கே. கரிசல்குளம் கிராமம் இந்த கிராமத்தில் குடிநீர் ,சாலை வசதி, வாறுகால்வசதி , தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிராமத்தின் அருகே உள்ள டாஸ்மார்கை அகற்ற வேண்டும், இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தென்காசி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை கே.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான கிராம மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்…
1045 ஓட்டுகள் உள்ள கிராமத்தில் வெறும் பத்து ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளது. வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி மையத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செய்தியாளர்கள் பேசியதை தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்தில் செய்தியாளர்கள் செய்திகளை சேகரித்தனர்.
அதனால் கிராமத்தைச் சுற்றியும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..