May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

4 மாதங்களுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

1 min read

Allowed to bathe in Manimutthar Falls after 4 months

28.4.2024
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமான மணிமுத்தாறு அருவியில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் குளித்து சென்றனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதில் மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்கும் தடாகம், தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை கடும் சேதமாகின. தொடர்ந்து வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அருவியில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்கு தனி தனியாக தடுப்பு கம்பிகள், காங்கிரீட் அமைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று முதல் பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு குளிக்க வனத் துறையினர் அனுமதித்தனர்.

அதன்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் வழக்கத்தைவிட ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.