May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது-ஜனாபதியிடம் இருந்து மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார்

1 min read
Seithi Saral featured Image

Vijayakanth received the Padma Bhushan Award from Janapati by his wife Premalatha

9.5.2024
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதத்தில் உடல்நிலை குறைபாட்டால் காலமான நிலையில் அந்த நேரத்தில் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்ற மத்திய அரசு அறிவித்து இருந்தது. நடிகர் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி வழங்கப்படும் என்று முதலில் அறிவித்திருந்தது. பிறகு அப்போது வழங்காமல் மே ஒன்பதாம் தேதி வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் இன்று அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கும் விழா பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (ஏப்ரல் 22) அன்று நடைபெற்ற விழாவில் ஐந்து பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மீதும் சக்கரவர்த்தி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று அந்த நேரத்தில் மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விஜயகாந்துக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை. இது குறித்து மத்திய அரசு தெரிவிக்கையில் அடுத்த அடுத்தகட்ட விழாக்களில் விஜயகாந்த்க்கு விருது வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது
ஆனால் இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில் விஜயகாந்த் இறந்ததும் அவருக்கு இருந்த அனுதாப அலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காக மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துவிட்டு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மத்திய அரசோடு கூட்டணி அமைக்காததால் இப்போது அவருக்கு விருது வழங்கப்படவில்லையா? என்று சில கேள்வி எழுப்பி வந்தனர்.

ஏற்கனவே மத்திய அரசு விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதும் அது குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா, “இந்த விருது அறிவிக்கப்பட்டது சந்தோஷம்தான். ஆனால் இது விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது அவருக்கு கொடுத்திருந்தால் நான் இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பேன். இந்த விருது அறிவித்தது காலம் கடந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது” என்று அந்த நேரத்தில் கருத்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்திருக்கிறார்.
அதில், இன்று என்னுடைய நண்பர் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. அது மட்டற்ற மகிழ்ச்சி. அவருடைய குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். எனக்கும் அவருக்கும் மிகவும் பிடித்தமான புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் பாடல் வரிகளை கூறி விஜய்காந்தை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். “இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்… இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடலை சத்யராஜ் பாடி இருக்கிறார் இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.