கனமழை எச்சரிக்கை – 26 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம்
1 min read
Heavy Rain Warning – Disaster Management Department letter to 26 District Collectors
15.5.2024
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 19ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதி உள்ளது.
கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும்; நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.