July 16, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிய கட்சி தொடங்கினார்

1 min read

Armstrong’s wife launches new party with a golden flag

5.7.2025
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5- ந் தேதி சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து இன்றுடன் ஒரு வருடம் ஆன நிலையில், நினைவுப் பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொத்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் 9 அடி முழு உருவச் சிலையும் இன்று திறக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயருடன் புதிய கட்சியை அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கினார் . கட்சியின் கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். நீல நிறத்தில் அமைந்துள்ள இந்த கொடியில் யானை தனது தும்பிக்கையில் பேனா வைத்திருப்பது போன்ற சின்னம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.மாநில தலைவர் ஆனந்தன் தனக்கு எதிராக செயல்படுவதாகவும் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதாகவும் கட்சியின் மேலிட நிர்வாகிகளுக்கு புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொற்கொடி புகார் அளித்த ஒரு வாரத்துக்குள், பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பில் இருந்தே அவர் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், புதிய கட்சி தொடங்குவதாக பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அறிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *