தென்காசி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.மாணவர் சேர்க்கை
1 min read
ITI Student Admission in Tenkasi District- District Collector Notification
15.5.2024
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ம் கல்வி ஆண்டிற்கான ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்
ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் தென்காசி. கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ம் கல்வி ஆண்டிற்கான ஐடிஐ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் சேர புதிய விண்ணப்பங்கள் 10.05.2024 முதல் 07.06.224 வரை இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவுகளான பொருத்துநர் மின்சாரப் பணியாளர், கம்மியர் மோட்டார் வாகனம், கம்மியர், மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான கம்மியர் டீசல், பற்றவைப்பவர் பம்ப் மெக்கானிக், ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.
மேலும் தொழிற்நுட்ப மையம் 4.0 திட்டத்தின்கீழ். மேம்படுத்தப்பட்ட சிஎன்சி இயந்திர தொழிற்நுட்ப வல்லுநர், கம்மியர் மின்சார வாகனம், மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர், தொழிற்துறை இயக்க கட்டுப்பாடு மற்றும் தானியக்கம்) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன. விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
14 வயது முதல் விண்ணப்பிக்க லாம். மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் அணுக வேண்டும். பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750/- விலையில்லா மதிவண்டி, சீருடைகள், தையல் கூலி. மூடுகாலணிகள் பாடப்புத்தககங்கள் வரைபட கருவிகள், பஸ்பாஸ். சலுகை கட்டண ரெயில் பாஸ் ஆகியன வழங்கப்படும்.
மேலும் உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதி உண்டு. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தென்காசி கடையநல்லூர், மற்றும் வீரகேரளம்புதூர் நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.