சுரங்கப்பாதை மழைநீரில் பேருந்து சிக்கிய விவகாரம்: ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
1 min read
Bus stuck in tunnel rainwater issue: Transport Corporation advises drivers
17.5.2024
நெல்லை வள்ளியூரில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்து நாகர்கோவில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின்ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் எச்சரித்தும், ஓட்டுநர் சென்றதால் தேங்கிய மழைநீரில் அரசு பேருந்து சிக்கியது. மிகுந்த சிரமத்திற்கு இடையே பேருந்தில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தை தொடர்ந்து ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தி இருப்பதாவது:
- சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கி இருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்.
- சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்துடன் இயக்க வேண்டும்.
- பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என சரிபார்க்க வேண்டும்.
- பணிமனை மழைநீர் வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
- பேருந்துகளில் தண்ணீர் ஒழுகுவது, சாய்வு இருக்கைகளில் பழுது போன்ற புகார்கள் வந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.