ஈரான் சிறை வைக்கப்பட்டுள்ள 40 இந்திய மாலுமிகளை விடுவிக்க இந்தியா வலியுறுத்தல்
1 min read
India urges release of 40 Indian sailors imprisoned in Iran
16.5.2024
அரசு முறை பயணமாக ஈரான் சென்ற மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை மந்திரி சர்பானந்தா சோனோவால், தலைநகர் டெஹ்ரானில் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி உசைன் அமீர் அப்துல்லாஹியனை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஈரானில் சிறை வைக்கப்பட்டுள்ள 40 இந்திய மாலுமிகளை விடுதலை செய்யவேண்டுமென உசைன் அமீரிடம் சர்பானந்தா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகளை விடுவிக்க ஈரான் ஒப்புக்கொண்டதாகவும், எனினும் அதில் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியிருப்பதால் மாலுமிகளை விடுவிப்பது தாமதமாகும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 8 மாதங்களில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் ஸ்டீவன், குளோபல் செரிலின், மார்கோல் மற்றும் எம்.எஸ்.சி. ஏரீஸ். ஆகிய 4 கப்பல்களில் பணியாற்றிய 40 இந்திய மாலுமிகளை ஈரான் கடற்படை கைது செய்து சிறை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.