ஆலங்குளம் அருகே வழிப்பறிக் கொள்ளையன் கைது
1 min read
Road robber arrested near Alankulam
16.5.2024
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமியை ஆலங்குளம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ராம்நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மாதவன், சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்
அப்போது அந்த வழியாக பைக்கில் அதிவேகமாக வந்த வாலிபரை மறித்து விசாரணை செய்தனர்.
அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகத்தின் பேரில் அவரை போலீசார் ஆலங்குளம் காவல்நிலை யத்திற்கு
அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், நெல்லை அருகே சுத்தமல்லி அடுத்துள்ள கொண்டாநகரம் நாராயணசாமி கோயில் தெருவைச் சேர்ந்த சொர்ணம் என்பவரது மகன் ரமேஷ் (எ) ராமையா (வயது 38) என்பதும், இவர் ஊத்துமலை பகுதியில் 2 வழிப்பறி, ஒரு வீடு உடைப்பு சம்பவத்தில் ஈடு பட்டுள்ளதாகவும், ஆலங்குளம் பகுதியில் காட்டூர் சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி சுமார் 32 – கிராம் தாலி செயின் பறித்தது,
ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சியில் வீட்டை உடைத்து நகை கொள்ளை உள்ளிட்ட தமிழகம், ஆந்திர பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப் பறி, கொள்ளை மற்றும் மணல் கடத்தல் வழக்குக ளில் தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 2 பைக்குகள், அரிவாள், 90 கிராம் தங்க நகைகள், தாலி செயின் 1, லாங்க் செயின் 2, கைச்செயின் 2, மூன்று மோதிரங்கள், ஒரு ஜோடி ஜிமிக்கி கம்மல், 3 -டாலர்கள் ஆகியவை பறி முதல் செய்யப்பட்டது.