July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க எதிர்ப்பு

1 min read

Opposition to handover of Kurdalam Falls to Forest Department

21.5.2024
தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தமான குற்றாலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது என்பதை வலியுறுத்தி இந்து முன்னணியினர் தென்காசி மாவட்ட துணைத்தலைவர் இசக்கிமுத்து தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளையும் வனத்துறை வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

தென்காசி மாவட்ட இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் இசக்கிமுத்து தலைமை யில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: –

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பகுதி தான் குற்றாலம். இங்கு பழைய குற்றாலம் அருவி, மெயின் அருவி, குழந்தைகளை கவரும் புலிஅருவி, பெண்கள் பாதுகாப்பாக குளிக்கும் சிற்றருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, தேன் அருவி உள்ளிட்ட பல அருவிகளை உள்ளடக்கியது தான் குற்றாலம்.

இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் எண்ணற்ற சுற்றுலா பயணிகள்வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்வதற்கும், இயற்கையான சாரலில் நனைவதற்கும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அரு விகளும் வனத்துறை வசம் ஒப்படைக்கப்படும் என தகவல் பரவுகிறது. ஏற்கெனவே நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கும், களக்காடு நம்பி கோயிலுக்கும், குற்றாலத்தில் உள்ள செண்ப காதேவி அம்பாள் கோயிலுக்கும் பக்தர்கள் இறை வழிபாட்டுக்கு செல்வது குதிரை கொம்பாக உள்ளது.

ஏனென்றால் இவை யெல்லாம் இதற்கு முன்னால் சுதந்திரமாக தனிமனித வழிபாட்டில் எந்த ஒரு தடையும் இல்லாமல் இருந்தது. ஆனால் வனத்துறை நிர்வாகத்தால் தனிமனித இறை வழிபாடு தடுக்கப்ப டுகிறது. அதேபோல் தற் போது குற்றாலம் அருவிகள் முழுவதும் வனத்துறை நிர்வாகத்திற்கு சென்றால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கருவிகளுக்கு செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். இயற்கையின் வரமாக திகழும் அருவிகளில் குளிக்க கட்டணம் வசூல் செய்வார்கள்.

மேலும் பணம் படைத்தவருக்கு மட்டும் அனுமதி கொடுக்கும் வழக்கமாக மாறிவிடும். ஏழைகளின் இன்ப சுற்றுலாத்தளம் என்று குற்றாலம் அடைமொழி அழிந்து விடும். சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கும் தென்காசி மாவட் டத்தில், 1000 பேர் வேலை செய்யும் அளவுக்கு ஒரு தொழிற்சாலை கூட இல் லாத இந்த மாவட்டத்தில், பல்லாயிரக் கணக்கான சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சுற்றுலாவை நம்பியே வாழ்ந்து வருகிறார்கள். எனவே அதனை கேள்விக் குறியாக்கும் வகையில் வனத்துறையினர் வசம் அருவிகள் செல்ல நேர்ந்தால் சுற்றுலா என் பது கேள்விக்குறியாகி மாவட்டம் மிகவும் பின்தங்கும் நிலைக்கு தள்ளப்படும். எனவே குற்றாலம் அருவிகளை வனத்துறையினர் வசம் ஒப்படைக்கும் முடிவை மாவட்ட நிர்வா கம் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் நாராயணன், மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் பூசன், அருணன். நந்து, மாரிச்செல்வம், வெங்கடேஷ், வழக்கறிஞர் சித்து ஆகியோர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.