மாறாந்தையில் டிரைவர் கொலை 3 பேர் கைது
1 min read
3 arrested for driver’s murder in Marantha
21.5.2024
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை பகுதியில் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர்களை போலீசார் கைது செய்தனர் மேலும் இரண்டு நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் ராமையா என்பவரது மகன் பேச்சிகுட்டி (வயது 23).இவர் வெளியூரில் தங்கி வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரியில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேச்சி குட்டியின் வீட்டருகில் அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா மகன் ஜெயராம்-(வயது 26), 17 வயது சிறுவன், முத்தையா மகன் ஆறுமுகம்( வயது 47) மற்றும் சிலர் மது அருந்தி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அவர்களை
பேச்சிக்குட்டி கண்டித்துள்ளார். இதனால் அந்த கும்பலுக்கும் பேச்சிகுட்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் மது அருந்தி கொண்டிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் பேச்சி குட்டியை சரமாரியாக தாக்கினர். அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திரு ந்த கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே பேச்சி குட்டி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன், எஸ்ஐ மாடசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த பேச்சிகுட்டியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை கிடாரக்குளம் பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே கிடாரக்குளம் விரைந்து சென்ற போலீசார் அங்கு மாதா கோயில் பின்புறம் மறைந்திருந்த மாறாந்தை வடக்கு தெருவை சேர்ந்த பிச்சையா மகன் ஜெயராம் (26), அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், முத்தையா மகன் ஆறுமுகம் (47) ஆகிய மூன்று பேரையு ம் கைது செய்து தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயராம், ஆறுமுகம் ஆகிய இருவரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத் தனர்.
இசக்கி ராஜா என்ற மதனை பாளை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அதே ஊரை சேர்ந்த மகாராஜா, மகேஷ் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.