தென்காசியில் மாவட்ட அளவில் துப்பாக்கிசுடும் போட்டி
1 min read
District level shooting competition in Tenkasi
26.5.2024
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத் தில் மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்ற நீதிபதி இருதய ராணி துவக்கி வைத்தார்.
தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தில் உள்ள தென்காசி மாவட்ட ரைபிள் கிளப்பில் வைத்து திருநெல்வேலி மாவட்ட ரைபிள் கிளப் சார்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியை சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்ற நீதிபதி இருதய ராணி, துப்பாக்கி சுடும் போட்டியை துவக்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து அதே வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் நீதிமன்ற நீதியரசர். ஆனந்தவல்லி, மற்றும் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பால் சுதிர், ஆகியோர் உடன் இருந்தார்கள்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் மாவட்ட அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
அதனைத்தொடர்ந்து நாளை மாலை இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.
இந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ரைபிள் கிளப் செயலாளர் எஸ்.வி.எஸ்.வேல் சங்கர் தலைமை தாங்குகிறார் . மாவட்ட அளவிலான இந்த துப்பாக்கி சுடும் போட்டியையும், பரிசளிப்பு விழா ஏற்பாடுகளையும் திருநெல்வேலி மாவட்ட ரைபிள் கிளப் செயலாளர் முகம்மது ரஷீத் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சக்தி மணிகண்டன், முர்ஷீத் அகமது ரிஸ்வி, ஷமீமா பர்வின், டேலிஸ் மைதீன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பாளர்
அர்னால்டு அரசு , திண்டுக்கல் மாவட்ட ரைபிள் கிளப் செயலாளர் தீபா தினேஷ், ராஜபாளையம் ரைபிள் கிளப் செயலாளர் ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பாளர் மதனகோபால் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பாளர் ஆன்டணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் திருநெல்வேலி மாவட்ட ரைபிள் கிளப் செயலாளர் முகம்மது ரஷீத் அனைவருக்கும் நன்றி கூறினார்.