June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

திருமணத்திற்கு மறுத்ததால் செவிலியரை காரில் கடத்தல்-சுங்கச்சாவடி ஊழியர்கள் மடக்கி பிடித்தனர்

1 min read

As she refused to marry, the nurse was kidnapped in a car by customs officials

25.5.2024
திண்டிவனம் அருகே திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் செவிலியரை நண்பர்களுடன் காரில் கடத்திச் சென்ற மாமனை சுங்கச்சாவடி ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சந்திரமௌலி என்பவரது மகள் ஜமுனா (வயது 22). இவர் சென்னை, வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பணிக்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த பொழுது அவரை வழிமறித்த ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியை சேர்ந்த சபாபதி என்பவர் தனது நண்பர்களான ராஜேஷ், ஹரிஹரன், அஜய் ஆகியோருடன் செவிலியர் ஜமுனாவை வாயில் துணியை வைத்து அடைத்து காரில் ஏற்றிக் கடத்தினார். தனது சொந்த ஊரான தொண்டிக்கு சென்று கொண்டிருந்தார். காரை ராஜேஷ் ஓட்டினார்.
பெண் கடத்தப்பட்டது குறித்து அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் போலீசார் தகவல் தெரிவித்திருந்தனர். கார் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் சுங்கச்சாவடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அங்கு தயாராக இருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் காரை மடக்கி பிடித்து பெண்ணை மீட்டு அங்கு பணியில் இருந்த அச்சரப்பாக்கம் போலீஸ் விஜயிடம் ஒப்படைத்தனர்.
உடனே போலீஸ் விஜய் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு போலீசார் பிடிபட்ட சபாபதியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தனது தூரத்து உறவுக்கார பெண்ணான ஜமுனாவை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்ததாகவும், தற்பொழுது தன் காதலை ஏற்க மறுத்து தனது செல்போன் அழைப்புகளையும் துண்டித்து வருவதால் அவரை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிவத்தார். மேலும் தனது நண்பர்களான ராஜேஷ், ஹரிகரன், அஜய் ஆகியோருடன் காரில் கடத்தியதாகவும் கூறினார்.
இதனை அடுத்து வேளச்சேரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செவிலியரை கடத்திய சபாபதி உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து வேளச்சேரி அழைத்துச் சென்றனர்.

மேலும் செவிலியர் ஜமுனாவை அவரது பெற்றோர்களை வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

பெண் செவிலியரை திருமணம் செய்து கொள்ள நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் காரில் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.