கேரளாவில் 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
1 min readSouthwest Monsoon likely to start in Kerala in 5 days
27.5.2024
தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெய்வது வழக்கம். கேரளாவை மையமாக வைத்து இந்த பருவ மழை தொடங்கும். கேரளாவில் 5 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த வருடம் ஒரு நாட்கள் முன்னதாக தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவக்கூடும் தென் அரபிக்கடல், மாலத்தீவு, கொமரியன் பகுதி, லட்சத்தீவுகளின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை உருவாகக்கூடும்.
மேலும் தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் சில பகுதிகளிலும், வட கிழக்கில் சில பகுதிகளிலும் இதே நாட்களில் பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடங்கிய பிறகுதான் நாட்டின் பல இடங்களில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும். அதன்படி தமிழகத்திலும் படிப்படியாக பருவமழை தொடங்குவது வழக்கம். அவ்வப்போது கேரளாவில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால், அதனுடைய தாக்கம் தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இன்னும் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் இதனுடைய தாக்கமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.