தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும்
1 min read
Southwest Monsoon will begin in South Tamil Nadu
30/5/2-024
தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யதொடங்குகிறது. 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் இன்று தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியால், தமிழகத்தில் வரும் 1, 2, 3ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 1ம் தேதி மற்றும் 2ம் தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 3ம் தேதி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல், கடலோரப்பகுதிகளில் 3ம் தேதி வரை 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.