தென்காசியில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்
1 min read
Tenkasi District Panchayat Heads Association meeting
30.5.2024
தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தப்பேரி டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார்.10 ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு 2019 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நிர்வாக ரீதியாக புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்ட தென்காசி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் 2019 ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் 2024 டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரேபோல், தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
அந்த முடிவை தமிழக தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும்.2021 ம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற
தென்காசி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள 2,500 ஊராட்சிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் 5 ஆண்டு பதவி காலத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவிக்காலத்தை குறைக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் பகுதியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது.
தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் முனியாண்டியின் வேண்டுகோளை ஏற்று அறவழியில் போராடுவது என்றும் தீக்குளிப்பு போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் அன்பு ராணி பொதுச் செயலாளர் சையது இப்ராஹிம், தென்காசி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் தலைவர் சத்யராஜ்,மாவட்ட கூட்டமைப்பின் பொருளாளர் ராஜ்குமார் .பொதுச் செயலாளர் வீரபாண்டியன் ஆலங்குளம் கூட்டமைப்பின் தலைவர் நீதி ராஜன் மாவட்ட கூட்டமைப்பின் ஆலோசகர் கீழக்கலங்கள் சந்திரசேகர், மேலநீலிதநல்லூர் முத்துப்பாண்டியன், மேலநீலிதநல்லூர் கூட்டமைப்பின் தலைவர் சகாயம்,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அழகுதுரை, கல்யாணசுந்தரம், உசேன், பூமிநாத் , மாரியப்பன்,பாபநாசம் முத்துலட்சுமி, ராமதுரை ,சாருகலா ரவி, முத்தமிழ் செல்வி ரஞ்சித், பிரேமலதா ராமஜெயம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.