சொக்கம்பட்டி பகுதியில் காட்டு யானை அட்டகாசம்
1 min read
Wild elephants are rampant in Chokkampatti area
30.5.20254
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி திரிகூடபுரம். ஊர் பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்த ஒற்றை யானை ஏராளமான தென்னை, பலா வாழை மரங்களை சேதப் படுத்தியுள்ளது.
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி திரிகூடபுரம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் தென்னை, மா, வாழை, பலா ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியில் அவ்வப்போது காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளி யேறி விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை. மா, பலா, வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றது.
ஏற்கெனவே கடந்த சில தினங் களுக்கு முன்பு காசிதர்மம் அருகே சின்னக்காட்டு பகுதி, மேலக்கடையநல்லூர் மேல்கால் பரவு பகுதியில் வயலில் புகுந்த குட்டி யானை ஒன்று நெற் பயிர்களையும், தென்னை மட்டைகளை பிடுங்கி சேதப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சொக்கம்பட்டி திரிகூடபுரத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள விளை நிலங்களில் புகுந்த ஒற்றை யானை ஏராளமான தென்னை, பலா மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
சுப்பிரமணியன், மாடசாமி என்ற செல்வம் ஆகியோரது தோடத்திற் குன் புகுந்த ஒற்றை யானை சுமார் 20க்கும் மேற் பட்ட மா,வாழை, பலா, தென்னை மரங்களை பிடுங்கியும், அகத்திகீரை ஆகியவற்றையும் மிதித்து சேதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று திரிகூடபுரத்தில் காட்டுயானை சேதப்படுத்திய பகுதிகளை வனத்துறைவினர் பார்வையிட்டு
உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராஜேந்திரன் மற்றும் அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் மட்டுமே புகுந்து அட்டகாசம் செய்து வந்த காட்டு யாணை இப்போது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருவதால் அந்தப் பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சனைகள் தலையிட்டு அந்த காட்டு யானையை வனப்பகுதிக்கு அனுப்பி வைக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.