June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை மாவட்டத்திற்கு 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

1 min read

21st Local Holiday for Nellai District: Collector Notification

7.5.2024
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் ஆனி தேர் திருவிழா வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

மேற்படி 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறி சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

மேலும், இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *