நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் எல்.முருகன் மந்திரிகளாக மீண்டும் பதவியேற்பு
1 min read
Nirmala Sitharaman from Tamil Nadu, Jaishankar L. Murugan re-inducted as Minister
9.5.2024
ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நடைபெற்றது. தேசிய கீதத்துடன் விழா தொடங்கியது. அதன் பின்னர் நாட்டின் 3-வது பிரதமராக மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் மந்திரி சபையில் மத்திய மந்திரிகளாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் பதவியேற்றனர்.
தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் மீண்டும் கேபினட் மந்திரியாக பதவியேற்றுக்கொண்டனர். எல்.முருகன் மீண்டும் இணை மந்திரியாக பதவி ஏற்றார்.
பதவியேற்றுக்கொண்ட மந்திரிகள் எந்த துறையை நிர்வகிப்பார்கள் என்பது இனி தான் தெரியவரும்.