July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 46,011பேர் தேர்வு எழுதினர்- 10,374 பேர் வரவில்லை

1 min read

46,011 appeared for TNPSC Group 4 exam in Tenkasi – 10,374 absent.

10.5.2024
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டத்தில் 56,385 பேர் விண்ணப்பித்த நிலையில் 46,011 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மொத்தம் 10,374 பேர் தேர்வு எழுத வரவில்லை

தமிழகத்தில் அரசு துறைகளில் 108 கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு துறைகள் மற்றும் நீதித்துறையில் இளநிலை உதவியாளர் 2,442 டைப்பிஸ்ட் 1653 உள்ளிட்ட 35 வகையான பணியிடங்கள் மூலம் 6244 காலியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.இதற்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.

தென்காசி மாவட் டத்தில் தாலுகா வாரியாக தேர்வு எழுதியவர்கள் விபரம் வருமாறு: தென்காசி தாலுகா வில் 55 மையங்களில் அதிக • பட்சமாக 13 ஆயிரத்து 740 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 10,811 பேர் வருகை தந்தனர்.இது 78.68 சதவிகித வருகை ஆகும் 2, 829 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஆலங்குளம் தாலுகாவில் 25 மையங்களில் 5,684 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 4, 540 பேர் தேர்வு எழுதினர். இது 79.87 சதவிகித வருகை ஆகும். 1,144 பேர் தேர்வு எழுத வரவில்லை. கடைய நல்லூர் தாலுகாவில் 34 மையங்க ளில் 9,059 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 7,415 பேர்தேர்வு எழுத வருகை தந்த

செங்கோட்டை தாலு காவில் 19 மையங்களில் 4,259 பேர் விண்ணப்பித்து இ ருந்தனர். இவர்களில் 3, 419 பேர் தேர்வு எழுதினர். இது 80.27சதவி கித வருகை ஆகும். 840 பேர் தேர்வு எழுத வரவில்லை.

சிவகிரி தாலுகாவில் 19 மையங்களில் 4,587 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 3,795 பேர் தேர்வு எழுதினர். இது 82.73 சதவிகித வருகையாகும். 792 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருவேங்கடம் தாலுகாவில் மாவட்ட அளவில் குறைந்த பட்சமாக 11 மையங்களில் 2,203 பேர் மட்டுமே விண் ணப்பித்து இருந்தனர். 1838 பேர் தேர்வு எழுதினர். இது 83.43 சதவீத தேர்ச்சி ஆகும். 365 பேர் தேர்வு எழுத வர வில்லை. வீரகேரளம் புதூர் தாலுகாவில் 18 மையங்க ளில் நான்காயிரத்து 48 பேர் விண்ணப்பித்து இருந்த னர். இவர்களில் 3,297 பேர் வருகை தந்தனர். இது 81.4 சதவீத தேர்ச்சி ஆகும். 751 பேர் தேர்வு எழுத வர வில்லை.

சங்கரன்கோவில் தாலுகாவில் 50 மையங்களில் மாவட்ட அளவில் இரண்டாவது எண்ணிக்கையாக 12,805 பேர் விண்ணப் பித்து இருந்தனர்
இவர்களில் தேர்வு எழுத வந்தவர்கள் எண்ணிக்கை 10,896 பேர் சதவிகித அடிப்படையில் முதலிடமாக 85.09 சதவீதம் பேர் தேர்வு எழுத வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு தேர்வு எழுத வராதவர்களின் எண்ணிக்கை 1909 ஆகும் .

தென்காசி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதிய பல்வேறு மையங்களை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.