June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே சத்துணவு ஊழியரின் மகள் நீட் தேர்வில் 603 மதிப்பெண்

1 min read

Nutritionist’s daughter scored 603 in NEET

தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்த பாஞ்சான் ஊராட்சி காளத்தி மடம் பகுதியில் சத்துணவு பணியாளரின் நீட் தேர்வில் 603 மதிப்பெண் பெற்றுள்ள மாணவிக்கு தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் பாராட்டு தெரிவித்து நிதியுதவி வழங்கினார்.

தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் குத்தபாஞ்சான் ஊராட்சி காளத்தி மடம் பகுதியில் சத்துணவு பணியாளரின் மகள் அம்ரீஷா என்கிற மாணவி நீட் தேர்வில் 603 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றவர் இவருடைய தகப்பனார் இறந்து விட்டார் தாயார் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் தான் இவரை படிக்க வைத்து வருகிறார் ஏற்கனவே இவருடைய சகோதரர் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இந்நிலையில் நீட் தேர்வில் 603 மதிப்பெண் பெற்ற மாணவி அம்பரீசாவை தென்காசி தெற்கு திமுக முன்னாள் மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் சென்று பாராட்டி பொன்னாடை அணிவித்து ஊக்க தொகையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தங்க செல்வம் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் இளைஞரணி அரவிந்த் திலக் சோனா மகேஷ் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி குமார் ஒன்றிய கவுன்சிலர் பசுபதி ஆலங்குளம் வேளாண்மை குழு தலைவர் திராவிட மணி கிளைக் கழக செயலாளர் அன்பழகன் கழக முன்னோடிகள் ராஜமணி அசோகன் அன்பழகன் டெய்லர் ஆறுமுகம் கிளைச் செயலாளர் செல்வம் குத்த பாஞ்சான் முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் சேகர் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மாணவி அம்ரிஷாவுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் அவருக்கு நெல்லை மருத்துவக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் தந்தையை இழந்த குழந்தை என்பதால் கல்லூரி படிப்பு ககு உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குத்தபாஞ்சான் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி குமார் அவர்களும் ஒன்றிய கவுன்சிலர் பசுபதி திராவிட மணி மற்றும் அட்மாசர்மன் திராவிட மணி வருகை தந்த கழக நிர்வாகிகளும் வானதி அம்ரிசாவை வாழ்த்தினார்கள்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *