July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் ஐடிஐ மாணவர் சேர்க்கை நீடிப்பு- மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

1 min read

Extension of ITI admission in Tenkasi District- District Governor Information

10.5.2024
தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் ஐடிஐயில் மாணவர் சேர்க்கை ஜூன் 13ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே உதவி மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் தென்காரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற பயிற்சி நிலையங்களில் (ஐ8923) நடப்பு ஆண்டில் மாணவர்கள் சேர உதவி மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கான அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 5/16 ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in வெல்டர், பிளம்பர். வயர்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8ம் வகுப்பிலும், எலக்ட்ரீசியன். பிட்டர். மோட்டா மெக்கானிக், ஏசி மெக்கானிக் மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தொடங்கப்பட்ட 4.0 பிரிவுகளுக்கு 10ம் வகுப்பிலும் நோச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ். சாதிச்சான்றிதழ், மொபைல் எண், இமெயில் ஐடி, ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் தென்காசி மாவட்டத்தில் உள்ள, தென்காசி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள உதவி மையம் மூலமாகவும், தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தென்காசியிலும் உதவி மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50/-மட்டும் டெபிட் கார்டு, ஜிபே அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக்கருவி, காலணி, பஸ் பாஸ் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/-உதவித்தொகை வழங்கப்படும்.

มมิติ முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். மகளிருக்கு வயது வரம்பு 14 மற்றும் உச்சவரம்பு இல்லை மற்றும் ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை. விருப்பமுடையவர்கள் வரும் ஜூன் 13ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு 04633 277962, 7603942550 9499937457 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.