“இந்தியாவும், மாலத்தீவும் இணைந்து செயல்படணும்”: ஜெய்சங்கர் விருப்பம்
1 min read
“India and Maldives must work together”: Jaishankar wishes
10.5.2024
‘இந்தியாவும், மாலத்தீவும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறோம்’ என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மாலத்தீவில் இருந்து இந்திய வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான அந்த நாட்டின் புதிய அதிபா் முகமது மூயிஸ் இந்திய அரசிடம் அறிவுறுத்தினார். இதனால், இருநாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் மோடியின் பதவியேற்பு விழாவில், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பங்கேற்றார். அதுமட்டுமின்றி, அவர் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், டில்லியில் இன்று (ஜூன் 10) மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். இந்த புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை இன்று டில்லியில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவும் மாலத்தீவும் நெருக்கமாக இணைந்து செயல்படுவதை எதிர்நோக்குகிறோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.