July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

புதிய மந்திரிகள் இலாகா விவரம்

1 min read

New Ministers portfolio details

10.5.2024
மோடி 3வது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றார். ‘மோடி 3.0’ அமைச்சரவையில் 71 பேர் பொறுப்பேற்றுள்ளனர். மொத்தம் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஐந்து பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். மோடி உட்பட பா.ஜ.,வை சேர்ந்த 61 பேரும், கூட்டணி கட்சியில் 11 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பிரதமர் மோடி: :பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள்;அணுசக்தித் துறை;விண்வெளித்துறை;அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர துறைகள்

மத்திய அமைச்சர்கள்

1) ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை

2) அமித்ஷா- உள்துறை

3) நிதின் கட்கரி- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.

4) நட்டா- – சுகாதாரத்துறை

5) சிவராஜ் சிங் சவுகான்- விவசாயம், ஊரகவளர்ச்சி

6) நிர்மலா சீதாராமன்- நிதித்துறை

7) ஜெய்சங்கர்- வெளியுறவுத்துறை

8) மனோகர் லால் கட்டார்- வீட்டுவசதி, மின்சாரம்

9) குமாரசாமி- கனரக தொழில்துறை

10) பியூஷ் கோயல்- வணிகத்துறை

11) தர்மேந்திர பிரதான்- கல்வித்துறை, மனித வள மேம்பாடு

12) ஜிதன்ராம் மஞ்சி- சிறு, குறு, நடுத்தர தொழில்துறை

13) லாலன் சிங்– பஞ்சாயத்து ராஜ்

14) சர்பானந்த சோனவால்- கப்பல் துறை

15) வீரேந்திர குமார்-சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல்

16) ராம் மோகன் நாயுடு- சிவில் விமான போக்குவரத்து

17) பிரகலாத் ஜோஷி- உணவுத்துறை

18) ஜூவல் ஓரம்-பழங்குடியினர் நலத்துறை

19) கிரிராஜ் சிங்- ஜவுளித்துறை

20) அஸ்வினி வைஷ்ணவ்- ரயில்வேத்துறை

21) ஜோதிராதித்ய சிந்தியா- தொலைதொடர்புத்துறை

22) பூபேந்திர யாதவ்-சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை

23) கஜேந்திர சிங் ஷெகாவத்- சுற்றுலாத்துறை

24) அன்னபூர்ணா தேவி- மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்

25) கிரண் ரிஜிஜூ- பார்லிமென்ட் விவகாரத்துறை

26) ஹர்தீப் சிங் புரி- பெட்ரோலியதுறை

27) மன்சுக் மாண்டவியா- தொழிலாளர் நலன், விளையாட்டுத்துறை

28) கிஷன் ரெட்டி-நிலக்கரி, சுரங்கம்

29) சிராக் பஸ்வான்- விளையாட்டுதுறை

30) சி.ஆர்.பாட்டீல்- ஜல்சக்தி


இணை அமைச்சர்கள்- தனி பொறுப்பு

31) இந்திரஜித் சிங்-திட்டம், கலாசாரம்

32) ஜிதேந்திர சிங்-பிரதமர் அலுவலகம்

33) அர்ஜூன் ராம் மேக்வால்-சட்டம் மற்றும் நீதி

34) பிரதாப் ராவ் ஜாதவ்-சுகாதாரம், குடும்ப நலம்

35) ஜெயந்த் சவுத்ரி-திறன் மேம்பாட்டுத்துறை


இணை அமைச்சர்கள்

இணை அமைச்சர்கள்

36) ஜிதின் பிரசாதா- வர்த்தகம், தொழில்.

37) ஸ்ரீபாத் ஏசோ நாயக்- மின்சாரம், மறுசுழற்சி.

38) பங்கஜ் சவுத்ரி- நிதித்துறை

39) கிருஷண் பால்- கூட்டுறவு

40) ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி,

41) ராம்நாத் தாக்குர்- வேளாண் மற்றும் விவசாயிகள்நலன்.

42) நித்யானந்த் ராய்- உள்துறை,

43) அனுப்ரியா படேல்- சுகாதாரம், குடும்ப நலன். ரசாயனம், உரம்.

44) சோமண்ணா- ஜல்சக்தி, மற்றும் ரயில்வே.

45) சந்திரசேகர் பெமசானி- ஊரகவளர்ச்சி, தகவல் தொழில்தொடர்பு

46) எஸ்.பி.சிங் பகேல்- பஞ்சாயத்துராஜ், மீன்வளம், விலங்குகள் நலம். பால்வளம்.

47) ஷோபா கரந்தலாஜே- சிறு,குறு, நடுத்தர மற்றும் தொழிலாளர் , வேலைவாய்ப்பு

48) கீர்த்தி வர்தன் சிங்- வனம் ,சுற்றுச்சூழல், வெளியுறவு

49) பி.எல்.வர்மா- நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகம்.

50) சாந்தனு தாக்குர்- கப்பல்த்துறை

51) சுரேஷ் கோபி- சுற்றுலா, மற்றும் பெட்ரோலியம்

52) எல். முருகன்- தகவல் ஒலிபரப்பு மற்றும் பார்லிமென்ட் விவகாரம்

53)அஜய் தம்டா- இணை அமைச்சர் ( போக்குவரத்து – நெஞ்சாலை )

54) பந்தி சஞ்சய் குமார்- உள்துறை

55) கமலேஷ் பாஸ்வான்- ஊரக வளர்ச்சி

56) பாகிரத் சவுத்ரி- வேளாண்த்துறை

57) சதீஷ் சந்திர துபே- நிலக்கரி, சுரங்கம்.

58)சஞ்சய் சேத்- பாதுகாப்பு

59) ரவ்னீத் சிங்- ரயில்வே

60) துர்கா தாஸ் உக்கே- பழங்குடியினர்

61) ரக்ஷா நிகில் கட்சே- விளையாட்டுத்துறை

62) சுகந்த மஜும்தார்- கல்வித்துறை

63) சாவித்ரி தாக்குர்- மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்

64) தோகன் சாஹு- வீட்டுவசதி்த்துறை

64) ராஜ் பூஷண் சவுத்ரி- ஜல்சக்தி.

65) பூபதி ராஜு ஸ்ரீநிவாஸ் வர்மா- கனரக தொழில்துறை

66) ஹர்ஷ் மல்ஹோத்ரா- (இணை அமைச்சர் (போக்குவரத்து நெடுஞ்சாலை )

67) நிமுபென் பாமனியா- நுகர்வோர்த்துறை

68) முரளிதர் மொகுல்- கூட்டுறவு

70) ஜார்ஜ் குரியன்- சிறுபான்மை துறை

71) பவித்ர மார்கரிட்டா- வெளியுறவுத்துறை

முக்கிய துறைகளில் மாற்றம் இல்லை

கடந்த முறை முக்கிய துறைகளில் இருந்த கேபினட் அமைச்சர்களுக்கு மீண்டும் அதே இலாக்காக்கள் கொடுக்கப்பட்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.