தென்காசியில் மாணவர்களுக்கு அதே பள்ளியில் ஆதார் பதிவு- ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
1 min read
In Tenkasi, Aadhaar registration for students in the same school was launched by the governor
11.5.2024
தென்காசி மாவட்டத்தில் மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல் தொடக்க விழா இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் சார்ந்த பதிவுகளை மேற்கொண்டு உதவிடும் இச்சிறப்பு நிகழ்ச்சி, 10 ஒன்றியங் களிலும் ஒரே சமயத்தில் 12 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் சார்ந்த இப்பணிகள், கடைசி மாணவர்கள் பயனடையும் வரை தொடர்ந்து முழுவீச்சில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சி மூலம் தென்காசி மாவட்டத்தில் 1325 பள்ளிகளில் சுமார் 2,50,000க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆதார் பதிவு மேற்கொண்டு பயன் பெற வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர். சாதிர், துணைத்தலைவர் கேஎன்எல்.சுப்பையா, , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) ந. தேவிகா ராணி, மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) (தொடக்கக்கல்வி) கண்ணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராசுப்பிர மணியன் மற்றும் அரசு அலுவலர் கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
One attachment