போப்பை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய மோடி
1 min read
Modi expressed his love by hugging the Pope
14.5.2024
ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, போப் பிரான்சிசை கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்திய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு, இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநாட்டின் இடையே, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக், உக்ரைன் அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்னைகள் தொடர்பாக பேசினார்.
இதன் தொடர்ச்சியாக மாநாட்டில் பங்கேற்க வந்த வாடிகனின் போப் பிரான்சிசை மோடி சந்தித்தார். வயது முதுமை காரணமாக வீல்சேரில் வந்த போப் பிரான்சிசை கட்டிப்பிடித்து போப்பிடம் தன் அன்பை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி. பின்னர் போப்பிடம் நலம் விசாரித்தார். இதன் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன் கடந்த 2021-ம் ஆண்டு ஜி20 மாநாடு இத்தாலியில் நடைபெற்ற போது வாடிகன் சென்ற பிரதமர் மோடி போப் பிரான்சிசை சந்தித்து பேசினார்.