June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தென்காசி திமுக எம்பி, மாவட்ட செயலாளர்கள் வாழ்த்து

1 min read

Tenkasi DMK MP, District Secretaries congratulate Minister Udayanidhi Stalin

15.5.2024
தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் வெற்றி பெற்ற நிலையில் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள் உடன் சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் வெற்றி பெற்ற நிலையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, திமுக பொருளாளர் துரைமுருகன், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிலையில் நேற்று திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து மலர்மாலை மற்றும் கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீ குமார், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை
வே. ஜெயபாலன், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ராஜா ஈஸ்வரன் எம்எல்ஏ ,ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் இலத்தூர் பூ.ஆறுமுகச்சாமி, ஆலங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் எம்பிஎம் அன்பழகன், கடையம் ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ் மாயவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ. கே. ரமேஷ், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன், ஹபிபூர் ரஹ்மான், சுரண்டை மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *