June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை வெளியிட்டார் இத்தாலி பிரதமர்

1 min read

The Italian Prime Minister released a selfie video with Modi

15.5.2024
மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை வெளியிட்டார் இத்தாலி பிரதமர்
இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ‘மெலோடி டீமிடம் இருந்து ஹலோ’ ( Hello from the Melodi team ) என்று கூற பின்னால் பிரதமர் மோடி சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, ‘செல்ஃபி’ பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், ‘மெலோடி’ என்ற வார்த்தையை மெலோனி பயன்படுத்தினார். அப்போது மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *