பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு
1 min read
Postponement of PM Modi’s visit to Tamil Nadu
16.5.2024
நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தது. மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
இதனிடையே, பிரதமர் மோடி வரும் 20ம் தேதி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியானது. சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரையிலான வந்தே பாரத் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரவிருந்த நிலையில் அவரது பணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தமிழக வருகையின் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.