சங்கரன்கோவில் அருகே அரசு பஸ் மரத்தில் மோதிய விபத்தில் 9 பேர் காயம்
1 min read9 people injured in an accident where a government bus collided with a tree near Sankarankoil
18.5.2024
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து, விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை கடையநல்லூர் அருகே உள்ள வேட்டரம்பட்டி யைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் ஓட்டினார்.
இந்த பஸ் சங்கரன்கோவில் வழியாக நாலுவாசன் கோட்டைக்கு ஊருக்கு கிழக்கே வந்த போது, திடீரென்று ரோட்டின் நடுவே ஒருவர் பைக்கை ஓட்டி வந்தார். பைக் மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் உதயகுமார் பஸ்சை ஓரமாக ஒதுக்கவே, ரோட் டோரத்தில் கிடந்த மணலில் சிக்கி முன்பக்க சக்கரம் ஒரு பக்கமாக இழுத்தது இதில் பஸ் டிரைவர் கட் டுபாட்டை இழந்த பஸ் ரோட் டின் அருகில் உள்ள வேப்பமரத்தில் மோதியது.
இதில் மதுரையைச் சேர்ந்த ஆனந்த் மனைவி முத்து மீனா (23). இவ ரது மகள் சிவயாழினி (11 மாதம்), பழங்கோட்டை யைச் சேர்ந்த ஐயப்பன் மனைவி முருகேஸ்வரி (35), மேலஅழகுநாச்சியார் புரத்தைச்சேர்ந்த ராஜா மனைவி பேச்சியம் மாள் (48), நாலாட்டின் புத்தூரைச் சேர்ந்த சங்கர் மனைவி சுந்தர வள்ளி (54), பழங்கோட்டை யைச் சேர்ந்த பெரியசாமி சங்கரன் மகள் ஸ்ரீஹரிணி (8), நாலாட்டின்புத்தூரைச் சேர்ந்த கந்தசாமி மனைவி ராமலட்சுமி (42), கடம்பூர் அருகே உடம்பன்குளத் தைச் சேர்ந்த ராமசுப்பு மனைவி கீதாபாரதி (70), பழங்கோட்டையைச் சேர்ந்த அழகர் சாமி மனைவி கார்த்திகா (33) ஆகிய 9 பேர் காயம் அடைந்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலி சார் 9 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்த னர்.
அங்கு முத்துமீனா, முருகேஸ்வரி, பேச்சியம்மாள் ஆகிய 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச் சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்துஷ குருவிகுளம் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.