சுரண்டை அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு- வாலிபர் கைது
1 min read
Girl cut with sickle near Surandai- youth arrested
18.5.2024:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்று திரும்ப செலுத்தாததால் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரவாளால் வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள ராமனூர் கிராமத்தை சேர்ந்த பரமசிவன் என்பவரது மகன் தங்கப்பாண்டி (வயது 35) இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 30). அதே ஊரைச்சேர்ந்த சுடலை என்பவரது மனைவி சிவனாத்தாள் (வயது 55) என்பவரது மருமகள் கஸ்தூரிக்கு மகளிர் குழுவில் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிய கஸ்தூரி கேரளாவிற்கு வேலைக்கு சென்று விட்டார். அவர் மகளிர்குழுவுக்கு கடனை திரும்ப செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் ஜாமீன் போட்டு கடனை வாங்கி கொடுத்த சுப்புலட் சுமிக்கு மகளிர் குழுவினர் நெருக்கடி கொடுத்தனர்.
இது குறித்து சுப்புலட்சுமி தனது கணவர் தங்கபாண்டியிடம் கூறி யுள்ளார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்த தங்கப்பாண்டி, .
சிவனாத்தாள் வீட்டுக்கு சென்று உனது மருமகள் கஸ்தூரி மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கி அந்த பணத்துடன் கேரளாவுக்கு சென்று விட்டார். இதுவரை தவணை தொகையை உரிய முறையில் கட்டவில்லை. இதனால் உனது மருமகளுக்கு ஜாமீன் போட்ட எனது மனைவியிடம் அந்த பணத்தை கட்டுமாறு கூறி மகளிர் சுய உதவிக் குழுவினர் நெருக்கடி கொடுக்கிறார்கள்.
உனது மருமகள் மாதம்தோறும் உனக்கு பணம் அனுப்புகிறார். அந்த பணத்தை வைத்து அவர் வாங்கிய கடனை நீ செலுத்த வேண்டியது தானே எனக் கூறியுள்ளார் . அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த தங்கப்பாண்டி, சிவனாத்தாளை அரிவாளால் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த சிவனாத்தாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீ.கே. புதூர் போலீ சார் தங்கபாண்டியனை கைது செய்தனர். மேலும் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.