விஷ சாராயத்துக்கு இறந்தவர்கள் உடல்களை ஒரே இடத்தில் தகனம்
1 min read
The bodies of those who died of poisoned liquor were cremated in one place
20.6.2024
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்களை கோமுகி நதிக்கரையில் ஒரே இடத்தில் வைத்து தகனம் செய்தவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கிற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டாட்சியர் மற்றும் தனி வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 29 பேரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.