August 3, 2026

Seithi Saral

Tamil News Channel

எல்.கே.அத்வானி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ்

1 min read

Discharged from LK Advani Hospital

5.7.2024
இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு கடந்த ஜூன் 26-ந்தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
96 வயதான எல்.கே.அத்வானிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறை மற்றும் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர் கடந்த ஜூன் 27-ந்தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு 9 மணியளவில் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்த நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மருத்துவமனையில் இருந்து அத்வானி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *