July 4, 2025

Seithi Saral

Tamil News Channel

ஜூன் 25-ம்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு

1 min read

25th June to be observed as Constitutional Massacre Day – Central Govt Notification

12.7.2024
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஜூன் 25-ம் தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார். அப்போது அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகைகளின் குரல் ஒடுக்கப்பட்டன. இந்தியாவின் கருப்பு நாள் என எதிர்க்கட்சிகள் எமர்ஜென்சியை குறிப்பிடுவார்கள்.

இந்த நிலையில் ஜூலை 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை மந்திரி அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, ஒரு சர்வாதிகார மனநிலையோடு, தேசத்தின் மீது அவசரநிலையை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை கழுத்தை நெரித்தார். மேலும் பத்திரிகைகளின் குரல் ஒடுக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 -ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினமாக (‘சம்விதான் ஹத்யா திவாஸ்’) அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. சர்வாதிகாரத்தை எதிர்கொண்டு, ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடிய கோடிக்கணக்கான மக்களை கவுரவிப்பதே மோடி அரசின் நோக்கம். இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும் என பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பா.ஜனதா அரசியலமைப்பை அழிக்க முயற்சி செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.