குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரை அறிவித்த டிரம்ப்
1 min read
Trump announced the Republican vice presidential nominee
16.7.2024
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளரை டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிபர் பதவிக்கான தேர்தலில் டிரம்ப் களத்தில் உள்ள நிலையில், துணை அதிபர் பதவிக்கு ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் போட்டியிடுவார் என்று டிரம்ப் அறிவித்தார்.
ஓஹியோவை சேர்ந்த ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் “ஹில்பில்லி எலிகி” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். டிரம்ப் ஆதரவாளர்களில் சிலர் பெண் அல்லது சற்றே மாநிறமாக உள்ள நபரை துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ய வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், தான் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
முன்னதாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் சிக்கிய டிரம்ப் நூலிழையில் உயிர்தப்பினார். இவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய 20 வயதான தாமஸ் மேத்யூ சம்பவ இடத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டார்.