கர்நாடகாவில் 100 சதவீதம் கன்னடர்களை மட்டுமே நியமிக்கும் மசோதா- மந்திரிசபை ஒப்புதல்
1 min read
Cabinet approves bill to appoint 100 percent Kannada candidates in Karnataka
17.7.2024
கர்நாடகாவில் குரூப் சி மற்றும் டி பிரிவு பதவிகளில் 100 சதவீதம் கன்னடர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அம்மாநில அரசின் முடிவுக்கு தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் கர்நாடகாவில் பிறந்தவர் மற்றும் 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும் மற்றும் கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும் மற்றும் எழுதவும் திறன் கொண்டவர் மற்றும் நோடல் ஏஜென்சியால் நடத்தப்பட்ட தேவையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.இவர்களுக்கு மட்டுமே, நிர்வாக பதவிகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பதவிகளிலும் 75 சதவீதமும் உள்ளூர் மக்களை நியமிக்க வேண்டும். விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மசோதா விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இம்மசோதாவிற்கு தொழில்துறையினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.