வெங்காடம்பட்டியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு
1 min read
Prizes for students in Venkadampatti
19.7.2024
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம்
வெங்காடம்பட்டி கோவில் திருவிழாவில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்
தென்காசி மாவட்டம், வெங்காடம்பட்டியில் ஊராட்சியில் ஸ்ரீசுடலைமாடசுவாமி கோவில் திருவிழாவையொட்டி, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பதக்கங்களை வழங்கி பாராட்டிப்பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளரும், கடையம் ஒன்றிய கவுன்சிலருமான மாரிகுமார், ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா ஜெயசிங் புலவனூர் ஊராட்சி கிளை செயலாளர் மோசே, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வின்ஸ்டன், சங்கர் ராம், மற்றும் ராஜபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.