சுரண்டை நகராட்சி அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
1 min read
Anti-corruption police register a case against exploitative municipal official
21.7.2024
தென்காசி மாவட்டம்,சுரண்டையில் கட்டிட வரைபட அனுமதிக்கு லஞ்சம்கேட்டநகராட்சி அலுவலர் உள்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீ சார் வழக்குப்பதிவு செய் தனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் முத்து பாண்டி யன் (வயது 71), இவர் ரெயில் வேயில் என்ஜின் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் ராகுல். இவர் தனது வீட்டின் அருகில் மற்றொரு வீடு கட்டி வருகி றார். அந்த பணியை முத்து பாண்டியன் மேற்பார்வை யிட்டு வருகிறார்.
சம்பவத்தன்று இவரது வீட் டுக்கு சுரண்டை நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் செய் யது அலி உள்ளிட்ட 2 பேர் சென்றனர். அவர்கள் முத்துப்பாண்டியனிடம்
புதிய வரைபட அனுமதி வாங்கிவிட்டீர் களா?, வாங்கவில்லையெ னில், அதனை விரைவில் வாங்கி விடுங்கள் என்று கூறி சென்றனர்.
இதற்கிடையே முத்துபாண்டியன் ஆன்லைனில் கட்டிட வரைபட அனு மதி கோரி விண்ணப்பித்தது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் கட்டிட வரைபட அனுமதி கோரி ஆன்லைனில் கட்டணத்தையும் செலுத்தி ரசீதுடன் சுரண்டை
நகராட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நகரமைப்பு ஆய்வாளர் செய்யதுஅலி கட்டிட வரைபட அனுமதி வழங்குவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும்,
அந்த பணத்தை காஜா என்பவரிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார். அதன்படி காஜா முத்துப்பாண்டியனிடம் ரூபாய் 20 ஆயிரத்தை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துபாண்டியன் இதுபற்றி தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.அதன்பேரில், சுரண்டை நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் செய்யது அலி மற்றும் காஜா ஆசியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
தென்காசி மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் இது போன்று
4 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.