புதூர் பேரூராட்சி தவணையில் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
1 min read
Kappom special medical camp before coming to Budur municipality ward
21.7.2024
தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே புதூர்(செ) பேரூராட்சி பகுதியான தவணை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கலைஞர் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் கோவிந்தன் உத்தரவுபடி தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு புதூர் (செ) பேரூராட்சி மன்றத்தலைவர் ஆ.ரவிசங்கர் தலைமை தாங்கினார் புளியரை மருத்துவ அலுவலர் பிகேஆர் ரெத்தினபெத்முருகன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த முகாமில் மகப்பேறு மருத்துவம், பொதுநல மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், எலும்பு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், கண் மருத்துவம், மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
மேலும் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் மற்றும் இசிஜி மற்றும் காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகன மூலம் ஆய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமில் புளியரை மருத்துவ அலுவலர் மற்றும் ஏனைய மருத்துவர்கள் .பிரவீன்குமார் காது மூக்கு தொண்டை மருத்துவா் மது, எலும்பு நல மருத்துவர் மலர்க்கொடி பொதுநல மருத்துவர் மாரீஸ்வரி மகப்பேறு மற்றும் ஸ்கேன் பரிசோதனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சீத்தாராமன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர் சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார் கல்யாணசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த முகாமில் சுகாதார செவிலியர்கள் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்
முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் அனைவருக்கும் நன்றி கூறினார் இந்த முகாமில் தவணை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பரிசோதனை மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் பெற்றுச் சென்றனர்