எமனேசுவரத்தில் சிவாஜி கணேசன் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி
1 min read
Tribute to Sivaji Ganesan statue at Emaneswaram
21.7.2023
பரமக்குடி நகராட்சி பகுதியான எமனேசுவரம் நேருஜி மைதானத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 23 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப் பட்டது. செவாலியே சிவாஜி பேரவை சார்பில் மறைந்த சிவாஜி கணேசன் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
செவாலியே சிவாஜி பேரவை தலைவரும், காங்கிரஸ் நெசவாளர் அணி மாநில செயலாளருமான டி.ஆர்.கோதண்டராமன் தலைமை தாங்கினார்.நெசவாளர் அணி மாநில சிறப்பு அழைப்பாளர் கெட்டி கோ.சேஷய்யன், மாவட்ட மகளீர் காங்கிரஸ் தலைவர் என்.
ராமலட்சுமி,மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எம்.நாகராஜன், என்.ஆர்.குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை தலைவர்பசும்பொன் அபுதாஹிர், நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் மாதவன்,பொருளாளர் டி.என். ரெங்கச்சாரி,நகர் காங்கிரஸ் செயலாளர் கார்த்திகைராஜ், சிவகங்கை வட்டார செயலாளர் புலவர் நாகநாதன்,நகர் நெசவாளர் அணி செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.நாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டு மறைந்த சிவாஜி கணேசன் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.