மக்களுடன் முதல்வர் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
1 min read
Chief Minister’s Program with the People: Advice from Chief Minister M.K.Stal
27.7.2024
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பரில் கோவையில் தொடங்கி வைத்தார். மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதற்கட்டமாக 2,058 முகாம்கள் மூலமாக 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கானப்பட்டது.
இந்நிலையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்ட செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை, தூத்துக்குடி, நாகை, வேலூர் உள்ளிட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளும் இதில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.