நிலமோசடி வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்
1 min readLand grab case: MR Vijayabaskar granted conditional bail
31.7.2024
நிலமோசடி வழக்கு மற்றும் கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கடந்த 16-ம் தேதி கேரளாவில் சிபிசிஐடி மற்றும் வாங்கல் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து இந்த இருவழக்குகளிலும் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது இரு வழக்குகளிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும் வரை சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதே வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜுக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.