காஷ்மீரில் போதைக் கும்பலுடன் தொடர்பு- 6 அதிகாரிகள் நீக்கம்
1 min read
Links with drug gangs in Kashmir- 6 officers sacked
3/8/2024
ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த 6 அரசு அதிகாரிகள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான செயல்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ., உள்ளிட்ட அமைப்புகள், இந்தியாவில் போதைப் பொருள் வினியோக நெட்வொர்க்கை விரிவுபடுத்த முயற்சித்து வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் உள்ள போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர், போதை கும்பலுடன் தொடர்பில் இருந்தது மற்றும் நிதி கொடுத்து உதவியதாக புகார் எழுந்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, போலீஸ் அதிகாரி உள்பட 6 அரசு அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்து துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அரசுப்பணிகளில் பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக, பணி உயர்வு பெறும் காவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், உளவுத்துறையினரிடம் இருந்து என்.ஓ.சி., சான்றிதழை பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.