August 10, 2026

Seithi Saral

Tamil News Channel

தோரணமலை முருகன் கோவிலில் அகன்ற படி திறப்பு 4ம் ஆண்டு தொடக்க விழா

1 min read

Inauguration of wide steps in Thoranamalai Murugan Temple 4th year Inauguration Ceremony

3-.8.2024
தோரணமலை முருகன் கோவிலில் அகன்ற படி திறப்பு 4ம் ஆண்டு தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில், ஆவுடையானூர் சிதம்பரநாடார்-ஜானகியம்மாள் குடும்பத்தினரால் கட்டப்பட்ட அகன்ற படி திறப்பு 4ம் ஆண்டு தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலையில் சிறப்பு அபிசேகம், தீபாராதனையும், ஆதிநந்தனார் திருக்கயிலாய வாத்திய திருக்கூட்டம், பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி ஆகியன நடைபெற்றது.
தொடர்ந்து மகளிருக்கான சிறப்பு பூஜை, மங்கல பூஜை நடைபெற்றது. இதில் திரளான மகளிர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் .மதியம் பாவூர்சத்திரம் செல்வாவின் பிரைட் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.. காலை முதல் மதியம் வரை அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்:

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *