சுதந்திர தினத்தன்று எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் விண்ணில் பாய்கிறது
1 min readSSLV on Independence Day The D-3 rocket takes off
8.8.2024
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்.-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
குறைந்த எடை கொண்ட மைக்ரோ வகையை சேர்ந்த இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 475 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குறைந்த புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 1 ஆண்டுகள் ஆகும்.
இந்த செயற்கைகோளில், எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்பிராரெட் பேலோடு (இ.ஓ.ஐ.ஆர்.), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளக்டோமெட்ரி பேலோட் (ஜி.என்.எஸ்.எஸ்.-ஆர்) மற்றும் எஸ்.ஐ.சி.யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு கருவிகளம் இதில் இடம் பெற்றுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளின் திட்டத்தை மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுதல் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன், இந்திய தொழில்துறை மற்றும் என்.எஸ்.ஐ.எல். நிறுவனத்தின் செயல்பாட்டு பணியையும் இந்த செயற்கைகோள் செயல்படுத்துகிறது.
இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 14-ந்தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது.