தோரணமலையில் சுதந்திர தினம்-முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்பு
1 min read
Independence Day at Thoranamalai- Ex-servicemen participate
15.8.2024
தோரணமலை முருகன் கோவிலில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
நாடுமுழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தோரணமலையில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
முத்துமாலைபுரத்தில் உள்ள ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலைநேர படிப்பகத்தில் உள்ள மாணவ-மாணவிகள் சுதந்திர போராட்ட் வீரர்கள் போன்று வேட்மிட்டு வந்திருந்தனர். இந்தியா வரைபடம் பெரிய அளவில் அகல்விளக்குகள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
முன்னாள் ராணுவ வீரர் மகேஷ், இயற்கை விவசாயி நடராஜன், நாட்டுப்பசு வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் ரவணசமுத்திரம் பெரியசாமி ஆகியோர் பேசினார்கள்,,
முன்னாள் ராணுவ வீரர் சதாசிவம், கே.கணபதி,
இருளப்பர், பெரியசாமி, தங்கையா, முத்துபாண்டி, புனிதராஜ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
பின்னர் மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
அதன்பின் கீழ்கண்ட உறுதி மொழி ஏற்கப்பட்டது.
நாட்டுக்கு உழைத்த பெரியோரை போற்றுவோம்
நாடுநலம் பெற எந்நாளும் உழைப்போம்
சுதந்திர நாட்டை பேணி காப்போம்
போதை பொருளை ஒழித்து கட்டுவோம்
இந்தியாவின் ஒருமைப்பாட்டை இதயத்தில் ஏற்போம்
நாடும் நாமும் முன்னேற்ற பாதையில் செல்ல சலிக்காமல் உழைப்போம்
இறைபணியோடு இந்தியாவை வளர்ப்போம்

இவ்வாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதேபோல் தென்காசி மாவட்டம் சில்லறை புரவு ஊராட்சிற்குட்பட்ட முத்துமாலைபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தோரணமலை பரம்பரை அறங்காவலர் கே ஆதிநாராயணன் சந்திரலீலா நினைவு மாலை நேர படிப்பகம் சார்பில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது திரளான மாணவ மாணவியர்கள் கையில் தேசிய கொடி பிடித்து பேரணியாக ஊர் முழுவதும் நடந்து சென்று ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்துடன் வீடுவீடாக பொதுமக்களுக்கு தேசியக் கொடியை அளித்தனர்.மாணவர்களின் தேசபக்தி பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது .
பின்பு தோரணமலை பரம்பரை அரங்காவலர் கே ஆதிநாராயணன் சந்திரலீலா நினைவாக அமைக்கப்பட்ட விளையாட்டு திடலில் தேச பக்தி உறுதிமொழி எடுத்தனர். பின்பு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மேற்கண் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்