July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் கேரள கனிமவள லாரிகளுக்கு கட்டுப்பாடு -கலெக்டர் அறிவிப்பு

1 min read

Restriction on Kerala Mineral Trucks in Tenkasi District – Collector Notification

16.8.2024
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான
செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா வைத்த கோரிக்கை மற்றும் சமூக ஆர்வலர் புளியரை ஜமீன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஏ கே கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்து விகிதங்களை தடுக்கும் வகையில் அவசர நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி மற்றும் புளியரை எஸ்.ஜமீன் ஆகியோரின் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளபடி தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. மேலும், குற்றாலம் சாரல் விழா நடத்தப்பட உள்ளது, அப்போது பெரும் கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இந்த பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். கனிமவள லாரிகளின் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பின்வரும் நடவடிக்கைகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை இயக்கம் அனுமதிக்கப்படுகிறது. இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இயக்கம் அனுமதிக்கப்படுகிறது.
சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் திங்கள் காலை 6.00 மணி வரை இயக்கம் அனுமதிக்கப் படுகிறது. என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தும் வகையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் மற்றும் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

One attachment
• Scanned by Gmail

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.